பிறப்பிடம்----நையாண்டி மேளம் 2

பிறப்பிடம்


கண்ணீர் பிறப்பிடம்
கண்கள் அல்ல ; நெஞ்சம்

மழை நீர் பிறப்பிடம்
வானல்ல ; கடல்

வியர்வை பிறப்பிடம்
சருமம் அல்ல ; உழைப்பு

அருவியின் பிறப்பிடம்
மலையல்ல ; காடு

உயிர் பிறப்பிடம்
தாய் அல்ல ; தந்தை

ஆனந்தம் பிறப்பிடம்
மகிழ்ச்சி அல்ல ; நெகிழ்ச்சி

அமைதியின் பிறப்பிடம்
மெளனம் அல்ல ; நிம்மதி

எழுதியவர் : Dr A S KANDHAN (19-Dec-18, 9:50 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 56

மேலே