சன்யா

அண்ணே எம் பொண்ணு பொறந்து ஒரு வாரம் ஆகுது. இன்னும் பேரு வைக்கல. தற்காலத் தமிழர் நாகரிகப்படி பெத்த கொழந்தைக்குத் தாய் மொழில பேரு வைக்கறத நம்ம சனங்க கேவலமா நெனைக்கிறாங்க.
@@@
நீ சொல்லறது சரிதான்டா தம்பி அழகய்யா.
@@@
அண்ணே நீங்க தான் இந்தி ஆசிரியர் ஆச்சே. உங்களுக்கு பிடிச்ச ஒரு இந்திப் பேர எம் மகளுக்கு வச்சிருங்க அண்ணே.
@@@
சரிடா அழகய்யா. பாப்ப என்ன கெழமை பொறந்தா?
@@@
பாப்பா போன சனிக்கெழமை பொறந்தா அண்ணே.
@@@@
அப்ப, பாப்பாவுக்கு 'சன்யா' -ன்னு பேரு வைக்கறன்டா தம்பி.
@@@
ஆஹா. 'சன்யா' ரொம்ப அழகான பேரு அண்ணே. அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்?
@@@
சனிக்கெழமை பொறந்தவ 'சன்யா'.
@@@
சுவீட்டு நேமு அண்ணே.
■■■■■■■■■■■■◆◆■■■■■■■■■■■◆
Sanya = born on Saturday.

எழுதியவர் : மலர் (21-Dec-18, 12:11 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 64

சிறந்த நகைச்சுவைகள்

மேலே