கார் முகிலாள் தரும் சுகமோ - - -

கார் முகிலாள் தரும் சுகமோ -
**********************************************************

கார்முகிலும் மழைஆக பயிர்உய்யும் புவிசெழிக்க
அரு முகில் தரும் இசையோ நம்மனதை வருடிவிடும்
நறு முகில் அதுஅளிக்கும் நல்லமணம் நாசிவழி
ஒரு முகில் இடியாக மறு முகிலோ மின்னிநிற்கும்
கார் முகிலாள் தரும் சுகமோ மனத்துள்ளே சிறகடிக்கும் !

எழுதியவர் : சக்கரைவாசன் (21-Dec-18, 7:27 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 104

மேலே