இலகுதல்

உங்கள் நாற்காலிகளை இலகு செய்யுங்கள்
நீங்கள் அமர்ந்து யோசிப்பவராக இருக்கலாம்.
வெகு தூரம்வரை கண்ணிற்கெட்டியவற்றை ரசித்தும் எதையோ யோசித்தவண்ணம் நடக்கலாம்.. அதிகக் காலமாக நீங்கள் உபயோகித்துக் கடந்த நாற்காலிகளின் வடிவங்களை கவனித்திருக்கிறீர்களா ? .. ஒரு நாற்காலியின் சேர்வு பாகம் அழகிய வில் போல் இருக்கும் இன்னொரு நாற்காலியின் சேர்வு பாகம் அரைவட்ட வடிவில் இருக்கும் .. இப்படி கால அளவுக்கு ஏற்றாற்போல இருக்கையின்போது கால்கள் பாரமிழந்து .. நாற்காலிகளுக்கு உடல் பாரமாகிறது ..
உங்கள் சோகங்களை நீங்கள் இல்லாதபோழ்து உங்கள் நாற்காலிகள் பேசிவிடும் .. ஆதலால் உங்கள் நாற்காலிகளை இலகு செய்யுங்கள் ..

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (22-Dec-18, 5:54 pm)
பார்வை : 79

மேலே