ஓய்வின் நகைச்சுவை 77 மார்னிங் வாக்

டாக்டர்: என்ன நான் சொன்னபடி ஒழுங்கா காலையிலே நடக்கிறீங்களா?
இவர்: ஆமாங்கோ சரியா 6 மணிக்கெல்லாம் நடக்க ஆரம்பிச்சிடுவேன். 1 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 6 கி மீ வரை நடப்பேங்கோ. நல்ல வியர்க்கும், மூச்சுக்கூட வாங்கும்,. நல்ல பசிக்கும்.....
டாக்டர்: என்ன .....தயங்கிறேங்க? சொல்லுங்க
இவர்: என் வீட்டுக்காரிதான் சரியில்லை டாக்டர். ரெம்ப நேரமா காலையிலே தூங்கக்கூடாதுனு 8 மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுவிடுகிறாள் வாக்கிங்கை முடிக்கக் விட மாட்டேங்கிறாள்.
டாக்டர்: ஐயோ கடவுளே உங்களைப்போல 2 பேர் போதும்