வேதம்
காற்றில் மிதந்து வந்த கீதம்
இறைவன் நமக்களித்த வேதம்
சப்தஸ்வரங்கள் தந்த நாதம்
காற்றின் மொழியும் அதுவே
அதை எல்லோரும் கேட்கமுடியவில்லை
மா முனிவர்களின் காதில்
மட்டும் சேர்ந்து ஒலித்தது வேதம்
முனிவர்கள் மூலம் நம்மை சேர்ந்தது வேதம்
ஆதி அந்தம் இல்லாதது வேதம்
காலத்தை தாண்டி நிற்பது வேதம்
வேதத்தில் உளநின்றொளிர்பவனும் அவனே
நம் ஜீவனுக்குள் இயங்கும் அவனே