தமிழ் கலாச்சாரம் இதுவா
========================
தமிழ் கலாச்சாரம் இதுவா?
========================
முகநூலால் தமிழகத்தில் கலாச்சாரம் காலாவதியானதோ !!!
2018 கிறித்துமஸ் தினத்திற்கு முன்தினம் திருவள்ளூர் மாவட்டம்-காக்களூர் கிராமத்தில் நடந்ததோர் தமிழரின் கலாச்சாரம் மீறிய காதல் வெறிக்கொலை. பெற்று வளர்த்துச் சீராட்டி வளர்த்தத் தாய் பானுமதி, அவள் மகள் தேவிபிரியா வயது 19, தனது உடற் பசி உந்துதலால் ஏற்பட்ட அவசர வெறியால் முகநூல் காதலன் சுரேஷ் என்பவனோடு இணை சேர துணிகளை மூட்டைக் கட்டியவள் வீட்டிலிருந்த நகைகளையும் சுருட்டிக்கொண்டு ஓட முயன்றாள். தனது தாயார் பானுமதி தடுத்ததால் அவளைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாள். அவ் வண்ணமே பானுமதித் தடுத்த போது முகநூல் காதலன் அனுப்பியக் கூலிப்படை ஆட்கள் இருவர் உதவியுடன் தாயாரின் கழுத்தை நெறித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளாள்.
விஞ்ஞான வளர்ச்சியால் தாய்த் தந்தைப் பாசமற்றுப் போனது. பொலிப்புக்கு தயாரான மிருகம் போல் ஆணும் பெண்ணும் கண்மூடித்தனமான நடந்துவருவது அதிகரித்துள்ளது. காரணம் பெற்றோர் பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தில் ஒழுக்கத்தை போதிக்காது விடுவதும், பள்ளிகளில் ஆசிரியர்கள் நீதிநெறி போதனை வகுப்புகள் நடத்தாமல் குறிப்பாக கிருத்துவப் பாடசாலைகளில் சமத்துவம் என்ற பெயரில் ஹிந்துப் பிள்ளைகளின் தெய்வபக்திக்கு எதிராக பேசி பிள்ளைகள் மனதை கெடுப்பதும்தான் நடைமுறையிலுள்ளது.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதவழிபாடு மாணவர்களுக்கு போதிக்கக் கூடாது என்று அரசியலமைப்பில் சொன்னாலும், அது கிருத்துவப்பள்ளிகளில் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்றும் இருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் இப்படி யொரு ஷரத்து (section)அரசியலமைப்பிலில் இருப்பதே தெரியாது போலும். பள்ளிகளை பொறுத்த வரையில் அரசாங்கம் கண்டு கொள்வதேக் கிடையாது.
காம்பவுண்டுச் சுவரில்லாப் பள்ளிகள், விளையாட்டு மைதானமில்லாப் பள்ளிகளே இன்று அதிகரித்துள்ளது. காரணம் சட்டத்தின் ஓட்டை. ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு குறைந்தது இவ்வளவு பரப்பளவுள்ள விளையாட்டு மைதானம் அவசியம் இருக்கவேண்டும் என்று இன்றுவரை எந்த வரைமுறையும் எந்த அரசும் ஏற்படுத்தவில்லை. எந்தக் கோர்ட்டாரும் இதை கண்டுகொல்வதேக் கிடையாது. ஒரு மாணவனுக்கு விளையாட இவ்வளவு இடம் தேவை என்று குறிப்பிட்டு உள்ளார்களேத் தவிர பள்ளியின் மொத்த மாணவர்கள் எவ்வளவு மாணவர்களின் பெருக்குத் தொகைக்கேற்ப விளையாட்டு மைதானம் அமைந்துள்ளதா என்று எந்த அதிகாரிகளும் சோதித்து அனுமதி வழங்கியது கிடையாது. மந்திரிகளின் கையில் பணம் அமுக்கினால் உடனே அனுமதிக் கிடக்கும்.
அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு பள்ளிகளுக்கு அனுமதி யளிக்கும் வகையில்தான் பள்ளிகளின் சட்ட திட்டங்கள் திருத்தப்படாமலே உள்ளது. 9௦% பள்ளிகளுக்கு சிறியளவில் கூட விளையாட்டு மைதானங்கள் கிடையாது. பொதுவாக விளையாட்டு என்பதையே மாணவர்கள் மறந்து போனார்கள். பள்ளிநடத்த வேண்டிய அருகதை பெற்றுள்ளதா என்பதை ப பெற்றோரும் கவனிப்பதில்லை. தாலுகா, மாவட்டக் கல்வி அதிகாரிகள், கல்வி மற்றும் உயர் கல்வி மந்திரிகள், கல்வித்துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடக் கண்டுகொள்வது கிடையாது. காரணம் அவர்களால்தானே இப்படிப்பட்ட தரங்கெட்டப் பள்ளிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப் படுகிறது.
மாணவர்கள் காதல் விளையாட்டைப் பள்ளியிலே நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆசிரியர் அடித்தால் ஒப்பாரி வைக்கும் பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் பள்ளியில் என்ன செய்கிறார்கள் என்று ரகசிய ஆய்வு செய்வதில்லை. இதனால் பிள்ளைகள் கேவலமாக 9 ம் வகுப்பிலேயே காதலிக்கிறார்களாம். இதெல்லாம் சொல்வதெல்லாம் உண்மைப் பகுதியில் படம் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
இந்தக் காரணங்களால்தான் மாணவர்கள் ஊரைச் சுற்றி வலம் வருவது அதிகரித்து, போதை பழக்கமும், தகாத சகவாசமும், ரவுடித்தனமும், அதிகமான காதல் லீலைகளும் பெருகி விட்டது. விளையாட்டுக்கு அரசு முக்கியம் அளிக்காததால் படிக்கும்போதே மிருகங்கள் போல் இணை உறவுக்கு அலைகிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்கும் செல்போன்கள், வண்டி வாகனங்கள், கை செலவுக்குப் பணம் உடை, வசதிகள் செய்துக் கொடுத்துவிட்டு பிள்ளைகளைக் கண்காணிக்கத் தவறி விட்டார்கள். தாயோ டி .வீ. சீரியலில் லயிக்கிறாள். தகப்பனோ போதையில் அலைகிறான். அவர்கள் பெற்ற பிள்ளைகளை பக்கத்து வீட்டுக் காரனா கவனிப்பான் ?
பெற்றோர்கள் பிள்ளைகளை வீட்டு வேலைகள் செய்யவிடாது மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், டி .வி., கம்ப்யூட்டர், பாதுகாப்பற்ற இன்டர்நெட் போன்ற விஞ்ஞான சாதன வசதிகள் செய்து கொண்டதால், விஞ்ஞான சாதனங்களில் லயித்து,பெற்றோர், உறவுகளின் பாசமற்று, நேசமற்று உறவுமற்றுப் போனார்கள். கடைசியில் ஆண்/பெண் பிள்ளைகள் மிருகமாகிப் போனார்கள்.
மிருகங்களைப் போல பெற்றுப் போட்டு விட்டால் போதாது. பெற்றோரின் கண்காணிப்புப் போதாது. அவர்களின் கண்டிப்பும் போதாது. காக்களூர் தேவிப்பிரியாவுக்கு, பி .காம். படித்து அறிவாளியாக்கத்தானே திட்டமிட்டார்கள். ஆனால் படிப்பவளுக்கு அவளுடைய பெற்றோர் ஏன் இன்டர்நெட் செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டும். காதல் செய்யட்டும் என்றா வாங்கிக் கொடுத்தனர்.
சிலப் பெண்பிள்ளைகள் பூப்பெய்தியவுடன் சுமார் 12 அல்லது 13 வயதில்கூட ஆண்பிள்ளைகளுடன் இணை வெறி ஈர்ப்பால் மிருகம்போல் ஆண்களுடன் ஓடிப் போகிறார்கள். ஏன் அந்த வயது பெண்களை 35 வயதான கல்யாணமான ஆண்கள் கூடக் கடத்திச்சென்றுவிட்ட சம்பவங்கள் ஏராளமிருக்கிறது. அப்படிக் கெட்டுபோனவள் மீண்டும் 6 அல்லது 7 மாதத்தில் கர்ப்பிணியாய் வீடு வந்து சேருகிறாள். அவளுக்கென்ன வழி. அவள் பெறப்போகும் பிள்ளைக்கென்ன வழி. கடத்திசென்றவன் 1 7 வயதிற்குட் பட்டவன் என்றால் சீர்திருத்தப் பள்ளியாம். அருமையான வெள்ளையனின் சட்டம். வாய்கிழிய பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் முன்னேற்றம் மாதர் அமைப்புகள் இந்தத் தாயின் கொலைக்கும வக்காலத்து வாங்குவார்களோ? பெற்றவர்களை மதிக்காது காதலியுங்கள் என்று அரசியல் பேசி தூண்டிவரும் கட்சிகள் என்ன சொல்லுவார்கள் ?
பெற்றோர் வாங்கிக் கொடுத்த செல் போனில் பேசி பெற்றோருக்கே ஆப்பு வைக்கும் கற்புக்கரசிகள் நடத்தும் உடல் பசி நாடகத்திற்கு காதல் என்கிறார்கள் காமத்தை ஆதரிக்கும் அரசியல் வாதிகள். பகுத்தறிவு வாதிகளால் எப்படி நாடு கெட்டது பாருங்கள். இதற்கெல்லாம் பகுத்தறிவு வாதிகள் பதில் சொல்வார்களா? மாட்டார்கள்.! ஆனால் இது போன்ற சம்பவங்கள் அவர்கள் வீட்டில் நடந்துவிட்டாலோ வீரம் பேசிய வாயை அடைத்துக்கொண்டு பீறிட்டு அழுவதையும் பார்த்திருக்கிறோம்.
ஆனால் பெரும்பாலோனோர் பெண்களை வெளியில் அனுப்பாது மிருக இணை வெறிக்கு அவளை ஆளாகாமல் பாதுகாத்துக் கொண்டார்கள். பெண்களைக் கண்ட கண்ட காவாலிப் பயல்களுடன் சேராமல் அவளை அவள் பெற்றோர் பாதுகாக்காப்பது தவறு என்று சொல்ல எவனுக்கும் உரிமை கிடையாது. காரணம் 18 வயதில் ஒரு பெண்ணுக்கு என்னத் தெரியும். அவளை நல்லது கெட்டது அறியவிடாமல் இந்த விஞ்ஞான அறிவியல் சாதனங்கள் கெடுத்துவிடுகிறது. அதை அவளுக்கு அவர்கள் பெற்றோரே வாங்கிக் கொடுத்துத் கெடுக்கின்றனர். பாதுகாப்பான இன்டெர்நெட்டை மட்டும் இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் கூட நம் நாட்டில் போடாது அரசியல் வாதிகள் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
பெண்களை நல்வழிப் படுத்த ஒருசட்டமும் இல்லாத நிலையில் இன்னும் எத்தனைப் பெற்றோர்கள் கொல்லப்படுவார்களோ தெரியவில்லை. பெண்களின் சுதந்திரம் தாயைக்கூட கொல்லும் அளவுக்கு வந்திருக்கிறது. இதற்கு எந்த பெண்களின் அமைப்புகளோ காதலை ஆதரிக்கும் அமைப்புக்களோ ஏன் கண்டனக்குரல் கொடுக்காமல் வாய்மூடி மௌனியானார்கள். உடல் இச்சைக்காக ஒருவள் ஒருவனுடன் ஓடிப்போவது கலாச்சாரச் சீரழிவு தானே. பெற்று வளர்ப்பவர்கள் எல்லாம் தங்கள் பெண் பிள்ளைகள் எவனோடாவது ஜாதி விட்டு பிறஜாதியானோடு ஓடிப்போகட்டும் என்றா சீராட்டியும் பாலுட்டியும் வளர்க்கிறார்கள். பெற்றோர்களின் உரிமைகளை அரசியல்வாதிகளும் பெண் அமைப்புகளும் ஏன் கண்டனம் செய்கிறது? பெண்ணுரிமை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பெண்கள் கெட்டுபோக தூண்டி விடுகிறார்கள். அவர்களை பொது மக்கள் தாக்கினால் ஒழிய திருந்த மாட்டார்கள். பெற்றோர்களுக்கு என்ன என்னக் கனவுகள் உள்ளது அவைகளைத்தான் பெண் நிறைவேற்றுவாளென்று தானே அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
இப்படி அவள் ஓடி மானத்தை வாங்கிடுவாள் என்று முன்னமே தெரிந்தால் எந்தப் பெற்றோராவது அவளை சுதந்திரமாக நடமாட வெளியில் விட்டிருப்பார்களா? எந்தப் பெற்றோரை பற்றியும் எந்த அரசியல் வாதியும் கவலைப் படமாட்டான். கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் மாட்டான். பொதுவாக சமூக சீர்திருத்த வாதிகள் பெண்கள் நேரங் கெட்ட நேரத்தில் வெளியில் சுற்றுவதும் கண்டவனுடன் பழகுவதுமா பெண் சுதந்திரம் என்று நினைகிறார்கள். கெட்ட நோக்கம் காமவெறி கொண்ட கும்பல்கள் வேண்டுமானால் இதை ஆதரிக்கும். நல்லக் குடும்பத்தில் பிறந்த எவரும் ஆதரிக்க மாட்டார். அரசியல்வாதிகளுக்குப் பரந்த தொலைநோக்குப் பார்வை கிடையாது. மக்களுக்கும் நாட்டின் கலாச்சாரம் பற்றிக் கவலை கிடையாது.
சாதரணமாக அகோரமான பெண்ணைக்கூட ஒருவன் வருணித்தானானால் அவள் அவனிடம் மயங்கி விடுவாளாம். ஆங்கிலத்தில் சொல்லுவர்கள் FLATTERY IS THE FOOD OF FOOLS. என்றும் பெண்களை WEAKER SEX என்றும் சொல்லுவார்கள். அதனால்தானே வளர்த்த பெற்றோரை விட்டுவிட்டு பெண்கள் கண்டவனோடு ஓடுகிறார்கள். இதன் பெயர் காதலாம். சிந்தியுங்கள் பெற்றோர்களே, அதன் படி விழித்தவாறு செயல் படுங்கள்.
அரசியல் வாதிகள் நாட்டைத் திருத்த வந்தவர்களல்ல. 90% அரசியல் வாதிகள் சொத்து சேர்க்க சுலப வழிக்கண்டு பிடித்த ஜென்மங்களே. கலாசாரத்தை நிலை நிறுத்த வந்தவர்களல்ல.
அவள் பெற்றோர்க்கென்ன வழி? இது போன்ற வழக்குகளில் சட்டம் இன்னும் திருத்தப்படாமலேத் தான் இருக்கிறது. பால்ய விவாகம் செய்து கொண்டவளின் கணவன் அகால மரணமடைந்தால் மீண்டும் மறுமணம் கண்டிப்பாய் செய்துகொள்ளவேண்டும் என்ற சட்டமியற்றாமல் திருமண வயதை 18 என்று ஏன் நிர்ணயிக்க வேண்டும்.
கலாச்சாரம் பாதுகாக்க அந்தந்த மாநிலத்திற் கெனத் தனித்தனிச் சட்டம் நாடு சுதந்திரம் அடைந்தபோதே போட்டிருக்கவேண்டும். ஏன் சட்டம் இயற்றப்படவில்லை? சட்டம் எழுதிய மெக்காலேவுக்கு அந்தந்த மாநிலங்களுக்கென தனிக்கலாச்சாரங்கள் உள்ளதென தெரியவில்லை. எல்லோருக்கும் பொருந்தாத ஒரு பொதுச் சட்டம் போட்டான். சுதந்திரம் அடைந்த பின்பாவது அதை நீக்கியிருக்க வேண்டும். எந்த அரசியல் வாதியும் மக்கள் கலாச்சாரச் சீரழிவைக் கண்டுகொண்டதில்லை. சில கிராமங்களில், தமிழ் நாட்டிலும் கூட வயதுவந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளை ஒரு வருடம் சேர்ந்து வாழ விட்டுப்பின் அவர்களுக்குப் பிடித்திருந்தால் கல்யாணம் இல்லையென்றால் பெற்றோரே கழட்டி விட்டு விடுகிறார்கள். அது அவர்கள் கலாச்சாரம் என்கிறார்கள். அவர்கள் எந்தச் சட்டத்திற்கும் கவலைபடாமல் தனித்து யாரும் கண்டு கொள்ளாத படிக்கு இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்திய பாரதத் துணைக் கண்டத்தில் சுமார் ஐம்பத்தாறு ராஜ்ஜியங்கள் அப்போது இருந்தனவாம். தற்சமயம் அவைகள் முப்பதாக மாறியுள்ளது. அந்தந்த ராஜ்ஜியங்களில் அவரவர்களுக்கென தனித்தனிக் கலாச்சாரங்கள் பாரத முழுமைக்கும் ஒரு கலாச்சாரமென இருந்து வந்துள்ளது. 56 தேசங்களில் விதவிதமான கலாச்சாரங்கள் நடைமுறையில் இருந்த போதும் கடவுள் தொழுதலில் மட்டும் ஒரே வகையான தொழுதல் பாரத முழுவதும் இருந்திருக்கிறது. அதுதான் நிலவு எனும் இந்து-வை அணிந்த மஹாதேவன் ஆகிய பரமசிவனை தொழுதலாம்.
அதேபோல் தமிழகத்தில் சாவுச்சடங்கு, வளைகாப்பு, பூமுடித்தல், பூப்பெய்தல், திருமணம், காதுகுத்து, குலதெய்வம் வழிபாடு ஆகியவை ஒரு ராஜ்ஜியத்திற்க்கும் மற்றொரு ராஜ்ஜியத்திற்க்கும் சற்று வேறுபடத் தான் செய்கிறது. இதேபோல் குழந்தை பெற்றல், பேணி வளர்த்தல், கல்வி கற்பித்தல் ஆகியவைகள் சடங்கு சம்பிரதாயங்களுடன் நிறைவேற்ற படுகிறது. இதில் சற்று மாற்றம் கண்டாலும் அக்கம் பக்கத்தோர் ஏசலுக்கு உட்பட நேரிடும்.
இப்படி வாழ்ந்த நம் தமிழ் சமுதாயம் தாய் தந்தை அரவணைப்பில், ஆதரவில் வளர்ந்த தேவிப்பிரியா முன் பின் தெரியாத ஒரு திருவாரூர் போக்கிரியிடம் முகநூலில் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டாளாம். அவனுக்கு திருவாரூர் பிறந்த இடமாம். ஆனால் அவன் துணி கடையில் கூலிவேலை செய்வதோ ஆந்திரா ஆரம்பாக்கத்தில். இவள் இருப்பதோ திருவள்ளூர் காக்களூரில். பெற்று வளர்த்து படிக்க வைத்த தாய் தகப்பனை விட்டுவிட்டு திருட்டுத்தனமாக அவனுடன் ஊரை விட்டு ஓடி போய் உல்லாசமாக இருக்க வேண்டி வெறித்தனம் ஏற்பட்டுள்ளது.
முகநூல் என்ற மாயையில் பல மதவாதிகள் பிற மதத்தை தூண்டி விடுவதும் மற்றும் அவர்கள் மதத்தினருக்கு பொய் தகவல்கள் பரப்புவதற்கும், அரசியல் வாதிகள் அண்டப்புளுகு புளுகுவதும், சில முட்டாள்கள் மற்றவர்கள் மனம் நோக மீம்சுகள் போடுவதற்கும், கள்ளக் காதலர்கள் உறவாடுவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் மிருக வெறி பிடித்த தேவி பிரியாவோ தன் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்கவும், தன் காதலுடன் ஓடிப்போவதைத் தடுக்கவும் செய்தத் தன் தாயை திருட்டுக்காதலன் அனுப்பிய குண்டர்கள் உதவியுடன் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளாள்.
இதற்கா அவசரம் அவசரமாகப் பெண் சுதந்திரம் கேட்டார்கள். இதற்காகவா பெற்றோர் இன்று பெண்களை படிக்க அனுப்புகிறார்கள். பெண்ணிற்கு பின்புத்தி. கெட்டப் பிறகு தான் அவர்களுக்கு புத்தி வரும் என்றார்களே, அது முழுக்க முழுக்க உண்மைத்தானே. பெற்றவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி பெண்களை படிக்கவைத்தால் நல்ல வேலைக்குப் போவாள். நல்ல கணவனாகப் பார்த்து திருமணம் செய்து வைப்போம் என்று தானே நினைப்பார்கள். நன்றாகப் படிப்பவள், மருத்துவத்திற்கோ, சையின்ஸோ, டெக்னாலஜியோ படிப்பாள். தேவிபிரியாவோ மந்த புத்திப் படைத்தவள் என்பதால் இவள் பெற்றோர் இவளை , பி.காம். படிப்பில் சேர்த்து உள்ளார்கள். இவளோ எதற்கும் லாயக்கற்றவள்.
இவள் பெற்றோரின் கனவைப் பாழாக்கியது மட்டுமன்றி பெற்ற தாயை மேலுலகம் காண அனுப்பிவைத்த பொற்செல்வி. பெண் கல்வி, பெண் சுதந்திரம், பெண் உரிமை என்றெல்லாம் வாய் கிழியப் பேசுபவன் இதற்கொரு பதிலையும் வைத்திருப்பான். நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் பெண்களை தெருத் தெருவாகவோ, ஊரூராகவோ மேய்ந்து வரும்படி அனுப்பியவர்கள் அல்ல. பிற்காலத்தில் வந்தவனெல்லாம் அடுப்பூதும் பெண்களெல்லாம் அடுக்கடுக்காய் புத்தம் படித்து மேதையாய் வருவாளென நினைத்தார்கள்.
ஆனால் நடப்பதென்ன ? படிக்கும் போதே காதல்? அவனுடன் ஓடல், ஓடிய யுவதிக்கு பின் அவதி, விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரிடம் தஞ்சம் என இதைத் தான் சுமார் 50 ஆண்டுகளைக் கண்டோம். ஆனால் இப்போதோ பெற்றோரையும் கொலை செய்யும் அளவுக்கு பெண்ணுரிமை வளர்ந்திருக்கிறது. இதையும் நியாயப்படுத்தி பேசுவதற்கென்றே ஒரு கும்பல் எப்போதும் இருக்கிறது. அப்படிப்பட்டவன் குடும்பத்தில் இப்படி நடந்தால் ஒருவேளை அடங்குவாரோ? என்னவோ. அந்தந்த மாநிலத்தின் கலாசார அடிப்படையில் தனித்தனி தண்டனைச்சட்டங்கள் கட்டாயம் இயற்றினால்தான் எவனும் காதல் கத்திரிக்காயைப் பற்றி பேசி ஆதரிக்காமல் வாயடுங்குவான். உண்மைத் தமிழர்களே இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுங்கள். எப்போதும் அமைதியாய் இருந்தால் உங்களைக் கோழை என்று பல கோழைகளும் நினைக்க வழிவகுக்கும். ஜாக்கிரதை.