தீய பழக்கங்களை கைவிடுவதற்கு எளிமையான மூன்றே வழிகள்

இந்த தலைப்பை பார்த்தவுடனே அனைவருக்கும் தோன்றுவது என்னவென்றால் இதை போல பல கட்டுரைகளும்,காணொளிக்காட்சிகளும் இருக்கின்றன என்று.
ஆம் அதே போலத்தான் நானும் எண்ணி பல கண்ணொளிக்காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பார்த்தேன்.நான் குறிப்பாக மேலைநாட்டினருடைய காணொளிக்காட்சிகளை தொடர்ந்து பார்த்து தெரிந்துகொண்டேன்.தீய பழக்கங்களை கைவிட மூன்றெய் செய்முறைகளை மட்டுமே நம் வாழ் நாளில் பயன்படுத்தி பயன்பெறலாம் என்று.

முதலில் நாம் அனைவருக்கும் சிறு வயதில் மிதிவண்டி பயன்படுத்தி இருப்பது தெரியும், ஆனால் நாம் அந்த மிதிவண்டியினை நன்றாக ஓட்ட பழக நிறய முயற்சிகளை கையாண்டு வெற்றியும் கண்டிருப்போம்.இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் நம்முடைய மூளைக்கு கட்டளை இடுவதால் தான் தொடர்ந்து நம்மால் மிதிவண்டியினை பழக முயற்சிசெய்ந்தோம்.நம்முடைய மூளைக்கு தொடர்ந்து ஒரு பழக்கத்தினை செயல்படுத்த கட்டளைவிடுத்தால் நாளடைவில் அது நம்முடைய முக்கியமான ஒன்றாக ஆகிவிடுகிறது.அதனால் தான் நாம் சிறிது காலத்திலே மிதிவண்டி ஓட்ட பழகி கொண்டோம்.


பழக்கங்கள் எப்படி உருவாகிறது?
முதலில் நாம் தெரிந்து கொள்வது எப்படி நம்முடைய மூளைக்கு ஒரு புதிய பழக்கம் உண்டாகிறது என்று.
எல்லாம் மூன்றே விதிகளில் நடக்கிறது
1) தூண்டுதல் 2) வழக்கமான செயல் 3) வெகுமதிகள்

முதலில் தூண்டுதலை பற்றி:
நாம் பொதுவாக ஒரு செயலை செய்தால் நம் மூளையில் ஒரு பொறி தூண்டப்படும் அல்லது அந்த விஷயத்தினை செய்து முடிக்க தோன்றும் இதனை தான் நாம் தூண்டுதல் என்று கூறுகிறோம்.

தூண்டுதலில் ஐந்து வகைகள் உள்ளது.
1 ) அந்த இடத்தில இருப்பதாலோ அல்லது அந்த இடத்தினை கடப்பதாலோ நீங்கள் அந்த விஷயத்தினை செய்ய சொல்லி மூளைஉங்களுக்கு கட்டளை இடும்.
2 ) குறிப்பிட்ட நேரத்தில் அந்த விஷயத்தினை செய்ய தோன்றும்
3 ) உணர்ச்சிகள்.உணர்ச்சிகள் என்பது நாம் சோகமாக அல்லது மகிழ்ச்சியாக இருக்கும்போது அந்த விஷயத்தினை செய்ய சொல்லி மூலையினால் நாம் தூண்டப்படுவது.
4 ) பார்க்கும் விஷயங்களை வைத்து நாமும் அதனை முயற்சி செய்ய தூண்டப்படுத்தல்.
5 ) ஒரு விஷயத்தினை செய்து முடித்தால் அந்த பழகித்தின் மூலம் தூண்டப்படுத்தல்.உதாரணமாக நாம் மதியம் சாப்பிட்டவுடன் தூங்குவது

சில இடையூறுகளால் எனது இந்த கட்டுரையினை அடுத்த பதிவில் முடிக்கிறேன்.மன்னிக்கவும்
இப்படிக்கு ரா.சுவர்ணராஜ்

எழுதியவர் : சுவர்ணராஜ் (28-Dec-18, 4:18 pm)
பார்வை : 101

மேலே