கனா

வாழ்வே ஒரு சுகம் சுகம் அதனை அடைய நீ பாரம் சுமக்க வேண்டும் .
உன் பாதை அது தடம் தடம் அது பிறக்க நீ தடை உடைக்க வேண்டும் .
தோல்வி அது கற்று தரும் பாடம் அது கற்று நீயும் வெற்றி கொள்ளும் நேரம் உலகம் உன்னை போற்றி பாடும் .

வா நீ வா உன் கால்கள் இரண்டும் காற்றில் ஓட .
வா நீ வா உன் விழியில் நீர்கள் வற்றி போக .
துணை ஏதும் வேண்டாமே உன் வினை வெற்றிதனை கொள்ளுமே .
கனா காணும் நேரத்தில் உன் காரியம் நினைவில் வெல்லுமே .
தொலைதூரம் பாரு வெற்றி வழி நீயும் தேடு .
கவலை கொண்ட மாது கண்ணீர் துடைத்து நீயும் முன்னேறு .


தீரா கனவு அது என்றுமே வீழாது .
ஓடா படகு அது கரையை தாண்டாது .
மேகத்துளியாய் உன் வேர்வை சிந்து.
கால மணியை உன் கையில் கொண்டு தீரும் நொடியை நீயும் தீயில் கொண்டு புது வெளிச்சத்தை உருவாக்கு .

சாலை வெளியில் இதயம் கனவு கொண்டது .
பந்தை பிடிக்க என் கைகள் ஏங்கியதே .
மட்டை கொண்டு நான் மைதானம் சென்றேனே .
சட்டம் எல்லாம் என்னை குற்றம் சொல்லியதே .
என் கனவோ தீரவில்லை .
என் மனமோ ஏற்கவில்லை .
கண்ணீர் தான் நிலையோ .....


சோகம் கொள்ளாதே .
தாகம் கொள் .
உன் வேகம் நில்லாது வெற்றி கொள்.
தோல்வி என்றும் நிலையல்ல .
மயில் தோகையின்றி அழகல்ல .
மண் வாசம் வீசிடுமே .
வெற்றி உன்னை சேர்ந்திடுமே .
புகழோ தன்னால் கூடிடுமே .
உலகம் உன்னை போற்றிடுமே .

சாபங்கள் தீர்ந்திடுமே .
உன் சாதனை பரவிடுமே .
உன் கனவோ கண்களை திறந்து அது காட்சிகளை செய்திடுமே .


ஒலியாய் ....
ஒளியாய் ......
அழலாய் .....
தழலாய் ......
வெற்றி நிழலாய் நீயும் வலம் வருவாய் .....

எழுதியவர் : M. Santhakumar . (28-Dec-18, 7:36 pm)
சேர்த்தது : Santhakumar
Tanglish : kanaa
பார்வை : 108

மேலே