துணிவின் நிலையே
உனக்கு உரிமையானதை - நீ
உணர்ந்து விட்டால்
சிறிதும் பயமின்றி உள்ளதை தேடு!
கல்லினும் உறுதியான தடைகளை வைத்தும்
எள்ளியே பரிகாச பேச்சினைக் கொண்டும்
மதத்தின் பெயரால் மனம் பிழறச் செய்தும்
அல்லலை அழகாய் அலங்காரம் செய்தும்
அத்தனை தாக்குதலால் அவமதிப்பு செய்வர்
எத்தனை இடர்கள் எவ்வழி வரினும்
சித்தமே சிறிது சிறிதாய் சிதைந்து அழியுனும்
பெற்றவர் பிறந்தவர் என பெரும்படை அழியுனும்
பற்றுள்ள பலவகை பாழாய் போயினும்!
உனக்கு உரிமையானதை - நீ
உணர்ந்து விட்டால்
சிறிதும் பயமின்றி உள்ளதை தேடு!
உரிமையை உணர்வது ஒரு வகை கலையே
உள்ளதைக் கேட்பதும் துணிவின் நிலையே - இதை
உணர்வது இல்லை உலகில் பிறப்போர்
உணர்ந்தவர் யாவரும் துணிவதும் இல்லை!
அறிந்து கொள் இதனை ஆற்றலின் நண்பா
தூற்றுவோர் பேசுவோர் வார்த்தையை புறந்தள்
ஏற்றமது வேண்டின் எதற்கும் அஞ்சாதே
கொள்கை ஒன்றே கூர்மிகுந்த அம்பு.
…. நன்னாடன்