முதுமை

மொட்டை மாடியில் அமர்ந்தும்
காற்றே அடிக்கவில்லை…
மனதில் ஒரே புழுக்கம்...
நாலு வருஷம் ஆச்சு
நல்ல செய்தி கேட்டு...
சிரித்து வைத்த சிரிப்பெல்லாம்
நினைத்து பார்த்து சிரிக்கிறேன்...
தனிமையில் சிரிக்கிறேனோ
சுற்றிமுற்றி பார்க்கிறேன்...
அக்கம்பக்கம் யாருமில்லை
யார் வருகிறார் என்னை தேடி...
கீழே வீட்டுக்குள்
மனைவி உண்டு பிள்ளை உண்டு... அவர்
மனசுக்குள் மட்டும் நானில்லை
மாடிக்கு வந்துவிட்டேன்...
வீட்டில் உள்ள பொருட்களிலே ...
நானும் ஒரு பொருளானேன்...
அவற்றையெல்லாம் துடைத்து வைத்தார்கள்
என்னை மட்டும் பழசாய் விட்டு வைத்தார்கள்...
ரிட்டையர் ஆகி போனதினால்
நான் மாடிக்கு வந்துவிட்டேன்...

எழுதியவர் : சிவா. அமுதன் (28-Dec-18, 10:10 pm)
Tanglish : muthumai
பார்வை : 59

மேலே