நட்பு
நண்பன் என்பவன் ஒருபோதும்
தீயவன் ஆவதில்லை ஏனெனில்
நண்பனும் நட்பும் என்றும்
நன்மைபயப்பது ஒன்றே அறியும்
தென்னையைப் போல்; நல்ல
நண்பனை அறியாது தீயோர்
சேர்க்கை ஒருவனுக்கு நடிப்பேதும்
பயக்காது மாறி வாழ்க்கையை
முட்புதராய் மாற்றிடுமே அதனால்
நல்லோரை நாடி நண்பராக்கி அவர்
நட்பில் வாழ்வில் இன்பம் காணலாமே.