நாட்காட்டி
தன்மீது
ஒட்டிக் கொண்டிருந்த
கடைசித் தாளையும்
கிழிக்கக் கொடுத்து விட்டு
என் மகளின்
தேர்வு அட்டையானது
நேற்று வரை
என் வீட்டு சுவரில்
தொங்கிக் கொண்டிருந்த
தினசரி நாட்காட்டி
மாற்றங்கள் நம்மை
மகத்துவமாக்கும்
என்பதை சொல்லாமல்
உணர்த்துகிறது!!!