எட்டுத்திக்கிலும் வெளிச்சம்
எட்டுத்திக்கிலும் வெளிச்சம் நான்
பூமியில் உதிக்கையிலே
கட்டுக்கடங்கா செல்வங்களே
கொட்டிக்கிடந்தன எம் இல்லத்தில்
எனக்குப் பின் பெற்றவளுக்கு ஏற்பட்டது
பேறு காலம் அதுவே - என்
வாழ்க்கைக்கான போரு காலம்
தம்பியை பெற்றபின் தாயவள் மாண்டு போனாள்
தந்தையவன் சோகத்தினால்
தரணி முழுதும் திரியலானான்
வயதேழில் நானே நின்று - குடும்ப
வரவு செலவை பார்க்கலானேன்
வாலிப நாட்கள் வரையில்
இந்நிலை தொடரலாச்சு
எட்டி நின்ற சொந்தமெல்லாம் - மெல்ல
கிட்டவர காரணம் பார்க்க
தரணி சுற்றும் அப்பன் கையால் - சுப
தாலி வாங்க பெண்ணைத் தேடும்
தங்க நிகர் யோசனையோடு
தகப்பனோடு சேர்ந்தது கூட்டம்
அல்லும் பகலும் அயராது உழைக்கும்
செல்வமகள் எனக்கோ வயது
இருபத்தேழை நெருங்கி இருக்க
பொறுப்பில்லா தந்தைக்கு
புதுக்குடித்தனம் தேடும் சொந்தத்தால்
சிறப்பு எப்படி வந்து சேரும்
செல்லுங்கள் எனதருமை மாந்தர்களே!