மகிழ்ந்திருக்கும் மனித இனம்

படைப்பை அழகாக்கி
ரசிக்க கண்ணை
பரிசாக்கி
பசிய பிணைப்பாக்கி
ரசனையை
நிர்மூலமாக்கிய
உன் ராஜதந்திரம்
புரிகின்றது.
ஒன்றை
கவனித்திருந்தால்
பசியென்ற ஒன்று
இல்லாதிருந்தால்
ரசனையோடு உழன்று
இனவிருத்தியோடு
நின்று
போட்டி
பொறாமையின்றி
மகிழ்ந்திருக்கும்
மனித இனம்..,