எதுவும் மாற்றமில்லை

எதுவுமே மாற்றமில்லை !
விடிதலின் பொழுதினில்
மாற்றமில்லை !
அவரவர் பணிதனில்
மாற்றமிலை !
“ஒரு நாளை” நம்பி
தின கூலியில் உழைப்பவனுக்கும்
கடைத்தெரு வியாபாரிக்கும்
மாற்றமில்லை
உழைப்பவனுக்கு கிடைத்திடும்
கூலியில் மாற்றமில்லை
மனிதனின் மனங்களின்
செயல்களை தவிர
பிற உயிர்களின் செயல்களில்
மாற்றமில்லை !
“நாளுக்கொரு பெயர்களை
வைத்து, விடுமுறை கேட்டு
தானாய் வந்திடும் நாளை
வரவேற்க !
வழக்கமாய் பனிரெண்டு நாழிகை
தாண்டும் நேரத்தை வரவேற்று
அதன் பின் நாள் முழுக்க
சோம்பலாய் திளைக்க !
இன்று நமக்கு ஒரு
நாள் கிடைத்தது
புத்தாண்டே வருக !