24-3-11(farewell)……

காதலுக்கு காதலனே

கல்லறை எழுப்பும்நாள்

தொடங்கும் முன்னே

முடிகிறது என்கனவு

முயலாமலே முடிவுரை

எழுதுகிறேன்


நீ இல்லை

என்பதை விட

நான் உன்னில்

இல்லை என்பதே

வேதனை தருகிறது!


உன்நிழலாய் நான்

தீச்சுடராய் நீ!


என்காயமும் நீ

மருந்தும் நீ!


இரவோடு நடக்கும்

போராட்டத்தை நிலவு

மட்டும் அறியும்!


கதிரவனுக்கு நன்றிகள்

ஆயிரம் உரைக்கிறேன்

உன்னை காணும்

வாய்ப்பளித்தற்குக்காக!


இனிமேல் அதுவும்

இல்லை எண்ணும்போது

இதயம் நொறுங்கிறது!!!!

எழுதியவர் : காசிவிசுவநாதன் (26-Aug-11, 11:47 pm)
சேர்த்தது : kasiviswanathan
பார்வை : 444

மேலே