இறைவனின் குழந்தைகள்

இறைவனின் குழந்தைகள்

இணையை அழைக்க
இல்லை மழையை அழைக்க
சிறகை விரித்து அழகு காட்டும்
ஆண் மயிலுக்கு
ஆயிரம் வண்ணங்கள்
சிறகுக்குள் வைத்தவன் யாரோ?

சிறிய பொந்துக்குள்
சிக்கனமாய் குடும்பம்
நடத்தும் சிட்டு குருவிக்கு
சிக்கனத்தை
கற்று கொடுத்தவன் யாரோ?

ஒரு முறை இட்ட உணவுக்கு
காலம் முழுக்க
வாலை ஆட்டும் நாயிற்கு
நன்றியை
சொல்லி கொடுத்தவர் யாரோ?

கூட்டு குடும்பத்தை
பாங்காய் நடத்தும்
யானை கூட்டத்துக்கு
கற்று கொடுத்தவர் யாரோ?

மூட்டை மூட்டையாய்
முதுகில் சுமக்கும்
கழுதைக்கும், காளைக்கும்
உழைப்பை கற்று கொடுத்தவர் யாரோ?

நாளைய பொழுது
நம் கையில் இல்லை
வேதாந்தம் பேசி
மூன்று தலைமுறைக்கு
சொத்துக்கள் சேர்த்தும்
நிம்மதி தேடும் மனிதர்களிடையே
நாளை பொழுது
வாழ்வா சாவா?
என்பது தெரியாமல்
நிலம் நீர் ஆகாயம்
இவைகளில் வாழ்ந்து
இன்றைய பொழுதை
இனிதே கழித்திடும்
மனிதனை தவிர
மற்ற உயிர்கள் அனைத்தும்
இறைவனின் குழந்தைகளே !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Jan-19, 12:59 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 92

மேலே