"மூணு வேளையும் நெல்லு சோறு ".........

ஜன்னலோர பேருந்து காற்றை வாங்கி கொண்டு,
சாலையோர காட்சிகளும்
கண்களில் பதிந்து கொண்டு
என் நினைவுகளும் எங்கெங்க சென்று வந்து
கண்களை தாலாட்டியது ......

சட்டென்று அருகில் யாரோ அமர
என் கண்களும் தாலாட்டை மறந்து
அவளை வாசிக்கத் தொடங்கியது ...

பச்சை பாவாடை சட்டையிலே,
பட்டனை துரத்தி விட்டு பின்ஊக்குகளும்
வண்ணக் கோலமிட்ட கைத் தையல்களும்
பளிச்சென்று அவளின் நிலையை படம் பிடித்தாலும்
கருப்பு வைரமாய் ஜொலிக்கும் முகத்தின் மகிழ்ச்சிக்கு காரணம் அறிய ஆசை .....

தயக்கத்துடன் வினாத் தொடுத்தேன்
"நீங்க எங்க போகணும் " என்று,

வினாவிற்காக காத்திருந்தவள் போல
பிள்ளை மனம் மாறாத கள்ளமற்ற புன்னகையுடன்
"வேளைக்கு போறேன் கா ..
வருஷம் பதினஞ்சு ஆயரம் சம்பளம் "
அதுமட்டுமில்லை கா,
மூணு வேளையும் நெல்லு சோறாம்"

என்றவுடன் மனசு கனத்து கொண்டது ..
அவள் கண்களில் தான் எவ்வளவு சந்தோசம்...

அடுக்கடுக்காய் அவள் ஆயிரம்
பேசிக்கொண்டு வந்தாலும்
மனம் அதை கவனிக்க மறுத்து...
"மூணு வேளையும் நெல்லு சோறு "
என்ற மூன்று வார்த்தை மட்டும்
திரும்ப திரும்ப காதில்
ஒழித்துக்கொண்டே இருந்தது....

அந்த கருப்பு வைரம் என்
மனதை காயப்படுத்திவிட்டது.........












எழுதியவர் : kalai (27-Aug-11, 10:52 am)
பார்வை : 373

மேலே