என்னடா உலகம் இது என்னடா உலகம்,,,,,,,,,,,,,,,,,,


என்னடா உலகம் இது
என்னடா உலகம் ,

பெண்ணை பார்த்து
மண்ணை தின்னும்
மண்ணுளி பாம்புகளாய்
ஆண்களின் வாழ்க்கை,

கல கல பேச்சால்
தூண்டில் போட்டு
ஆண்களை விழுங்கும்
திமிங்கலமாக பெண்களின்
பார்வை ,

என்னடா உலகம் இது
என்னடா உலகம் ,

புத்தன், இயேசு ,காந்தியை தந்த
பெண்கள் பிறந்த உலகமல்லவா, இப்போது
ஆண்களை பாதை மாறி போகவைக்கும்
பேதை பெண்கள் பிறப்பது எதற்கு டா,

அண்ணை தெரசாள் மனம்
கொண்ட பெண்கள் பூமியில்
தேவையடா, ஆனால்
இனி வரும் காலங்களில் புனித
பெண்கள் பிறப்பதில்லையடா,

என்னடா உலகம் இது
என்னடா உலகம் ,

மதங்களின் வேலிக்குள்
சிக்கி தவிக்கும் மனிதா ,
கடவுளை மதமாக பிரித்தது நீதானடா ,
ஆனால் கடவுள் ஒருவர் தானடா ,

கடவுளுக்கே முல்வேலி போட்டு
இடம் ஒதுக்கும் கொடுமை நடப்பது
இந்த பூமியில் தானடா,
ஏழை மனிதர்கள் வாழ சிறு குடில் இல்லை
என்ன கொடுமையடா ,

அட போங்கடா................

என்னடா உலகம் இது
என்னடா உலகம்,,,,,,,,,,

இப்படிக்கு...................my 7th sense

எழுதியவர் : நந்தி (27-Aug-11, 12:44 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 484

மேலே