இதயத்தில் தையல் போடும் நிலை - - - - தோழர் நன்னாடன் அவர்கள் பதிவுக்கு மாற்றுவடிவம்

இதயத்தில் தையல் போடும் நிலை - - - - (மாற்றுவடிவம் )
*******************************************************************
(தோழர் நன்னாடன் அவர்களின் padivuku ஓர் மாற்று வடிவம் )

தருமியாய் காத்திருக்கும் எனக்காக
தாரமாய் நானிருப்பேன் என்றவளே
அருமையான காலநேரம் வரும்வரை
பொறுமையா யிரு யெனக் கூறக்கேட்டு
உறுதியான காதலுக்கு அச்ச்சாரமென
உளமார நானும்தான் ஏற்றுக்கொண்டேன்

அவ்வப்போது சந்திப்போமென நான்கூற
அசட்டுச் சிரிப்புசிரித் தகன்றவளே --உன்
பிறந்தநாள் பரிசாக பூங்கொத்து நானளிக்க --அதில்
ஒரேயொரு மலரை மட்டும் எடுத்துச்சென்றவளே
ஒரேயொரு முத்தம் உன்னிடம் நான்கேட்க
ஓங்காரமாய்ப் பார்த்தபின் ஒதுங்கியவளே

முடிவல்ல ஆரம்பமென முயற்சிக்கமுயற்சிக்க
ஓராண்டாகியும் இன்னமும் உனை நான் காணேன்
மற்றொருநாள் பூங்காவில் உனைக்காண நேர்கையில் --நீயோ
மாற்றானோடு ஒய்யாரமாக ஒட்டிய நிலையில்
கிட்டாத கனவு கலைந்தது உண்மைநனவு நேர்ந்தது --எனில்
கிழிந்தஎன் இதயத்தை தையலிட எவருமில்லை
இந்நிலையில் எனைவைத்த தலைமைகளே வாழ்க
வளமுடன் !

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Jan-19, 2:16 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 72

மேலே