மின்சாரக் கண்ணா

வெட்டருவாள் எதற்குடா?
பெண் மனதை வெட்டி வீழ்த்த
உன் விழி இருக்கையிலே .....!/
சுட்டெரிக்கும் சொல் இல்லை உன்னிடம் /
சுண்டி இழுக்கும் சுடர் நீயடா .......!/

கட்டெறும்பாக ஊருவதோ
உன் நினைவடா /
நெஞ்சினிலே கட்டழகன் உன் உருவச்சிலையடா .....!/

ஆழமான பாசக் காரன் நீயடா./
அழுத்தமன
மனசுக்காரனும் நீதானடா.....!/
சாதிக்கத் துடிப்பதோ உன் உள்ளமடா /
சாதி என்னும் கூண்டுக்குள்ளே -
நீ அடைபட்ட சிங்கமடா ...../

வெட்கத்தை எப்படியோ அழைத்து /
விட்டு விட்டாய் என்னிடம் /
-நீ பக்கம் அமராமலே ஏன்? என பதில் கூறடா ....!/
உன் இதழ் உருட்டி விடும்
மெல்லிய புன்னகையில்
குளிர்ந்து போனது என் நாணமடா /

காமம் கொண்டு நீ நெருங்கையிலே/
கட்டிலும் தாங்கிடுமோ ? என்னும்
அச்சம் கண் விழிக்கத்தான் செய்யுதடா /
கனவில் மட்டும் கண்ணா
நீ கண்ணடிக்கிறாய் /
அதனாலே கண்ணீரில் மிதப்பதோ நானடா /

காலம் கனியுமா? உன் இனிய அன்பு கிடைக்குமா ?
உன் தேக்க மர உடம்பு திகட்டிடுமோ ?
எனக்கு சொல்லடா ./

நீ வேம்பாகக் கசப்பாயோ?
இல்லை கரும்பாக இனிப்பாயோ.?
பலாச்சுளை போல் சுவை கொடுப்பாயோ? நான் அறியேன் கள்வனே /
உள்ளம் கொள்ளை போனது /
உன்னிடம் என்பதோ உண்மையடா /

தாடிக்கும் விடுதலை கொடு /
தாவணிக்கும் விடுதலை கொடு /
உன்னை நெருங்கும் சல்வார்
பெண்ணுக்கும் விடுதலை கொடு./
என் தடிப்பான நெஞ்சத்திலே /
இருட்டான இதயறையிலே /
துடிப்பாக நீயடா தினம் தினம்
துடிப்பதோ அதில் உன் நினைவடா /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (10-Jan-19, 8:04 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 89

மேலே