உன் விழிகளில்

உன் விழிகளில் ....
கவிதை by: கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்


உன்னை அவன்
சிறை வைத்தான்
உன் விழி பார்வைக்கும்
விளிக்கும் பூவிதழ்களுக்கும் !

நீ
இரண்டாம் நாளே
தப்பி விட்டாயே
அவன்
மனச் சிறையிலிருந்து!

உன் விழிகளில்
அவன் மயங்கி
திருமணப்பத்திரிக்கையில்
அவன் பெயர்
வரவேண்டுமென்று
ஆசைப்பட்டான்!

நீயோ
தினப்பத்திரிகையில்
அவன் பெயர்
வரும்படி செய்து விட்டாயே!

மனிதர்களே......
மின்னலைத் தேடிக்
கொண்டு இருக்காதீர்கள்
அவள்
மயக்கும் விழிகளிலிருந்து
மின்னல்
எப்படி உண்டானது
அவளிடம் கேளுங்கள் !

அவள்
அவன் சமாதிக்கு
வரும்போதாவது
அவளிடம் கேளுங்கள்
அவனை
கண்டபோதெல்லாம்
படபடக்கும்
அவள் கண் இமைகளுக்கு
என்ன அர்த்தம் ?

பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (10-Jan-19, 8:21 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : un vizhikalil
பார்வை : 416

மேலே