அழுக்கும் இழுக்கும்

=====================

கொண்டவள் அன்பின் கொடைமறந்து நாள்தோறும்
கண்டவள்பின் செல்லும் கணவனவன் – உண்டதும்
உண்பதற்குக் காத்திருக்கும் உத்தமிகள் உள்ளன்பை
அண்டாதான் நெஞ்சம் அழுக்கு.
**
கட்டிய தாரம் கடைசிவரை வேண்டுமென்றே
ஒட்டி உறவாட ஒர்தாலி – கட்டிக்
குடும்பம் நடத்திடக் கொண்டுவரும் பெண்ணால்
இடுக்கண் வருதல் இழுக்கு.
**
ஒழுக்கம் தவறாமை ஓம்புகின்ற ஆண்பெண்
வழுக்கா திருக்கும் வகைக்கு – இழுக்காய்
இழுக்கும் இழிஞர் இழுப்பை மனத்தால்
அழுக்கெனக் கொள்ளும் அறிந்து
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Jan-19, 2:09 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 42

மேலே