ஒருப் பெண்ணினின் சோகம் ....



மாவிலை தோரணம் கட்டி,
வாழை இலை வாசலில் வைத்து
மஞ்சள் குங்குமம் தெளித்து
மத்தளங்கள் முழங்க ,
சொந்தங்கள் வாழ்த்து பாட
அழகாய் முடிந்தது கல்யாணம்...

பாம்பேயில் வேலை செய்யும்
மாப்பிளையை முடித்ததில் தந்தைக்கு பெருமிதம்...
வசதியான குடும்பம் என்று தாய்க்கும் சந்தோசம்...
இனிமையாக தொடங்கிய இல்லற வாழ்கை
நான்குவருடத்திலே நரக வாழ்க்கை யானது ...

கல்யாணப் பரிசாக தாய்மையை கொடுத்து
கூடவே உயிர் கொல்லியை
கொடுத்து விட்டு அவன் போய்
சேர்ந்து விட்டான் கல்லறைக்கு...

"இவவந்து எம் மவன கொன்னுட்டா "புகுந்த வீட்டில் ....
"ராசிஇல்லாத பொண்ணு " பிறந்த வீட்டில் ...
"இவ முஞ்சில முழிச்சிட்டு போன நல்லதே நடக்காது " எதிர்த்த வீட்டில் ....
.
..
....
பதினாறு வயதிலே திருமணம்
பத்தொன்பது வயதிலே விதவைக் கோலம்...
..
அழுவதற்கு கூட சக்தி இல்லாமல் போன தேகம்...
வாழ்க்கை பாடம் படிப்பதற்கு முன்னே
முடிந்து போன ஒருப் பெண்ணினின் சோகம் ....




எழுதியவர் : கலை (27-Aug-11, 6:27 pm)
சேர்த்தது : kalai
பார்வை : 433

மேலே