என் தோழியின் கடைசி பதில்
கல்லறை வரை நட்பு தொடரும் என்றவள் ,
யார் கல்லறை வரை என சொல்லவில்லை !
கல்யாணம் என்று வந்தவுடன் என் நட்பை கொன்று,
அதன் கல்லறையில் திருமண அழைப்பிதழை வைத்து விட்டு ,
கண்டிப்பாக எதிர்பார்ப்பேன் என்கிறாள்!
மொய்யாய் என் உயிரையும் எதிர்பார்க்கிறாளோ என்னவோ ?
ஏன் இந்த (ஏ)மாற்றம்!