பொங்கல் 1
பொங்கலே
ஏன் இன்று இத்தனை
மகிழ்வாய்ப் பொங்குகின்றாய்
பூனையை அகற்றி
பானையை ஏற்றினாயோ
ஏழையின் அடுப்பில் ?
பொங்கலே பானையில்
சோராய்ப் பொங்கியது போதும்
அணையில் நீராய்ப் பொங்கு
உழவன் பஞ்சம் குறைய
தமிழன் நெஞ்சம் நிறைய
பொங்கலே நீ
பாத்திரத்தில் மட்டும் பொங்கு
சமுத்திரத்தில் பொங்காதே
சுனாமி எனும் பெயரால்
ஒரு கரையில் சூரியனை விடியவைத்தாய்
மறு கரையில் ஏன் மீனவனை மடியவைத்தாய் ?
வெல்லம் போட்டால்
பொங்கு போதும்
வெள்ளமாய்வந்து ஒடுக்காதே
பொங்கலுக்கு இலவசமாய்
வெல்லம் கூடக் கிடைக்காமல் வாடும்
வாடும் ஏழைக்கு குடிலுக்குள்
வெள்ளமாய் வந்து படுக்காதே
மழைநாளில் தரைக்குளம்
அமர்ந்த மிச்சமே ஏழைக்குடிலில்
எங்கள் தாய்க்குலம் அமர
தை மாதம்
எனக்குப் பொங்கல்
அல்ல
அரை படிச் சோறாவது
அடுப்படியில் பொங்கும் நாள்தான்
எனக்குப் பொங்கல்
ஏழைகள் கிழிந்தத் துணியை
தைத்துடுதும் நாள்தான்
எனக்குத் தைத்திருநாள்
பெண்கொடுமை வன்கொடுமை பொன்கொடுமை
செய்யும் பொருக்கி எரிந்தழியும்
எனக்குப் போகி
தமிழ் மகள் என் அன்னைக்கு
மாட்டுப்பெண்ணாக வரும் நாள்தான்
எனக்கு மாட்டுப் பொங்கல்
அன்பு மட்டும் பொங்கும் புதிய உலகை
நான் கண்கொண்டு காணும் நாள்தான்
எனக்கு காணும் பொங்கல்