நலிவடையச் செய்யும் நகைக்கடை

நன்னாள் சுபநாள் திருநாள் - பின்
நினைவேந்தல் காணும் துயரநாள்
மணம் செய்தல் மனை புகுதல் வளைகாப்பு மாட்டல்
என வாழ்க்கையோடு இணைந்த விழாவிற்கு - தமிழன்
வாஞ்சையோடு செய்வது பொன்னேயாகும் - அதற்கு
வலிய போகுமிடம் சொர்ண விற்பனை கடையாகும்
கையிலிருக்கும் தங்கத்தை மாற்றி புதுசு எடுத்தாலும்
புதிதாகவே புடம் போட்ட நகை எடுத்தாலும் - கழிவாக
சேதாரம் என்றும் வேதாளம் போல செய்கூலியும்
நகையின் இணையான விலைக்கு இழப்பாக
இயன்றவரை பெற முயலும் தெய்வ நெறி நிறைந்த
தேகம் பெற்றவர்களே சொர்ண கடை முதலாளிகள்
ஏழையானவன் நகை எடுக்கக் சென்றாலும்
பெரும் வீரம் மிகுந்தவன் அதையே செய்தாலும்
பணம் மிகச் செறிந்தவன் பகட்டுக்கு வாங்கிணும்
பாதிக்கு மேல் பணத்தை இழந்தே ஆகணும் - நிற்க
தேவைக்கு நகையை விற்று திரவியம் பெற வேண்டின்
நாலில் இரண்டு பங்கிக்கிற்கு நட்டம் என்பது உறுதி
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (14-Jan-19, 9:46 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 97

மேலே