காதலில் தான் சாத்தியமோ
புலப்படாமலே புலன்களுள்ளுணர்வதும்,
பார்க்குமிடமெலாம் போலுருவாய்
நீக்கமற நிறைந்து தெரிவதும்,
பேசாப் பெருமெளனங்கள் பேரலையாய்
எண்ணக் கடலில் ஆர்ப்பரித்து
மனக்கரையை அரித்தரித்தாங்கே
காலத்துக்கும் அழிந்திடாக்
காயச்சுவடொன்றைப் பதிப்பதும்,
நோயே நோய்க்கு மருந்தாவதும்,
வாழ்வே வாழ்! என வாழ்த்துவதும்,
வலியே வலிக்குக் காரணம் கேட்பதும்,
காதல் ஒன்றில் தான் சாத்தியமோ...?
~ தமிழ்க்கிழவி (2019).