குருதியில் செல்களெல்லாம்

இறைவனே எங்கு சென்றாய்

இன்றைய நிலை மறந்து

நீருக்கும் வழியில்லை

நெல் சோறுக்கும் வழியில்லை

குருதியில் செல்களெல்லாம்

சிதைந்து அழுகலாச்சு

குருத்திட்ட பனையும் கூட

தலையிழந்து வாடலாச்சு


பெருந்திட்ட வளாகமெல்லாம்

பெரிய ஏரியில் வளரளாச்சு

நிலம் விளைய நீர் சென்ற

பாதையெல்லாம் கழிவு நீர் கால்வாயாச்சு

அறம் மறந்த கூட்டம் அதுவே

அரசியல் பண்ணும் துறையாய்யாச்சு

கொடுஞ்சிறைக் கண்ட கூட்டத்தாலே

பெரும் கல்விக்கூடம் பெருகலாச்சு


ஊனமாக்கும் உணவுகளே

இவ்வுலகில் பெருகலாச்சு

கருங்கல் போன்ற இதயம் படைத்தோர்

கணக்கின்றி வளரலாச்சு

உயிர் காக்கும் மருத்துவம் கூட

பணம் காய்க்கும் மரமாயாச்சு

சினம் கொண்டு கேட்போர் நிலையோ

சிறகிழந்த கிளியாய் ஆச்சு


பெருகி வரும் குற்றத்தாலே

பெரிய இன்னல் வருமே என்றால்

நாட்டில் வாழும் நல்லோரெல்லாம்

கூனி குறுகி ஏன் வாழ வேண்டும்

இதை நீ மாற்ற முயற்சிக்காமல்

இறைவனே எங்கு சென்றாய்

இன்றைய நிலை மறந்து

- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (18-Jan-19, 8:10 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 168

மேலே