வாழத்தகுதி இல்லா நிலை

பெற்றோர் பிள்ளையை பேணாத போது

பிறந்தோர் பணத்திற்காக கூடும் போது

பிடித்த உணவை நோயால் உண்ண முடியாத போது

எம் மருந்தும் நோயை தீர்க்காத போது

எப்போதும் அச்சத்தில் வாழும் போது

படித்த கல்வி பாதுகாக்க தவறிய போது

குடும்பத்தின் நிலையறிந்து பொருளீட்டாத போது

கற்ற வித்தையால் கெளரவம் குலையும் போது

ஊதரி நீ என உலகம் ஒதுக்கிய போது

பெற்றோர் இருந்தும் பிள்ளைகளை ஏளனிக்கும் போது

நம் பிள்ளை தம் குறைபாட்டால் நெஞ்சம் பதறும் போது

பெற்றோருக்கு பிள்ளையிருந்தும் பிச்சை கேட்கும் போது

பதவியிருந்தும் நெஞ்சில் துணிவில்லாத போது

தமக்கான தேவையைக் கூட செய்ய இயலாத போது

- - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (18-Jan-19, 5:55 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 587

மேலே