எருமை

"மம்மி..மம்மி...பொறுமை ன்னா என்னது?"

"ம்ம்....இப்போ கொஞ்ச நேரத்துல ஒரு எருமை வரும்....அதுட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ..."
--------------------
"என்னடா செல்லம்... ஏன் வெளியே உட்கார்ந்திருக்கீங்க..?"

"மம்மிகிட்ட.. பொறுமை ன்னா என்னனு கேட்டேன்பா..அதுக்கு கோவமா.... இப்போ ஒரு எருமை வரும்....அதுட்ட கேளுன்னு சொன்னாங்க....நானும் அரைமணி நேரமா வெயிட் பண்றேன்...ஒரு எருமையும் வரலைப்பா...!!"

"லொக்........லொக்"

"ஏம்ப்பா...இருமுறீங்க....?

"அது ஒன்னுமில்லடா... செல்லம்... இதெல்லாம் டாடிகிட்ட கேட்டா கரெக்டா சொல்லித்தருவேன்ல...... இப்போ...... யாராவது நம்பள திட்டுனாங்கன்னு வச்சுக்கோ....அந்த நேரத்துல நமக்கு வர்ற கோவத்தை அடக்கிக்கிட்டு பதில் பேசாம இருந்தோம்னா அதுதான் பொறுமை..! புரிஞ்சதா...?!

"புரிஞ்சது...புரிஞ்சது... மம்மி சொன்ன எருமை யாருன்னும் புரிஞ்சது...டாடி சொன்ன பொறுமையும் புரிஞ்சது...!!"

எழுதியவர் : ஷெரிப் (18-Jan-19, 7:41 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 104

சிறந்த நகைச்சுவைகள்

மேலே