நிலத்தில் படகுகள் – ஜெனிஸ் பரியத்

அன்புள்ள ஜெ

இந்த புத்தகவிழாவில் நான் வாங்கிய நூல்களில் உடனே படித்தநூல் ஜேனிஸ் பரியத்தின் நிலத்தில் படகுகள். ஏற்கனவே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் அவரை பார்த்திருக்கிறேன். இனிமையான உற்சாகமான ஆளுமை என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே அந்நூலை வாசிக்கவேண்டும் என நினைத்தேன்.மொழியாக்கம் பற்றி எழுதியிருந்தீர்கள். மிகச்சரளமான அழகான மொழியாக்கங்களாக இருந்தன இதிலுள்ள கதைகள். மொழி எந்தவகையிலும் அந்த உலகத்தைக் கற்பனைசெய்துகொள்வதற்குத் தடையாக இருக்கவில்லை. அருமையான சிறுகதைகள். வடகிழக்கின் நிலம் தொன்மங்கள் ஆகியவை நம் முன் எழுந்துவருகின்றன. ஆனால் நவீனச் சிறுகதைகளுக்குரிய கச்சிதமான ஆக்கங்கள்
டி. ரவீந்திரன்

எழுதியவர் : (19-Jan-19, 5:16 am)
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே