தைப்பூசத்தின் தவப்புதல்வன்

திருச்செந்தூரிலே வெகு எழிலாக
நீல கடலை நோக்கும் வடிவழகா

தினந்தினம் என் மனதில் தோன்றி
தீந்தமிழை வளர வைப்பாய் திருமுருகா

அடுக்கடுக்காய் அழகு நூல்கள் செய்ய
அழகு சிந்தனை அருள் புரிவாயோ ஆறுமுக

பிழையில்லா வண் சொல்லை கற்று
அழிவில்லா நல் கருத்தை கூற அருள் தருவாய் நீயே

அன்னையாய் நீ இருப்பாய் என
அனுதினமும் உனை நினைத்தேன் நானே

அருட்கொடையே ஆழ்மனதின் அனல் விலக
ஆறுதல் தருகின்ற சுயம்பு தேவே

உன்னை தினம் நான் போற்றிப் பாட
என்னை நீ தான் ஆக்க வேண்டும் உன் தூதாய்
-- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (21-Jan-19, 4:19 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 44

மேலே