சுபாஷ் சந்திர போஸ்
பாரதத்தை சிதறடித்த அன்னியனை சிதறடித்தவன்!
வங்கத்துப் புலி உருமியதே
எம்தேசத்தின் விடுதலை நடைபழகியதே!
அன்னியன் குண்டுகள் துளைக்கும் தேசத்தின் அங்கம் காக்க
இவன் சிந்தையில் மலர்ந்ததே இந்திய தேசிய இராணுவம்!
இவன் சீருடை சீர்நடை
ஓர்படை கண்டே
அந்நியன் அஞ்சியே விடைபெற்றான் நம்மிடை!
இந்திய வரலாற்றில் இவனை மறைக்க
சில புற்களுக்கு கை கால் முளைத்தாடும்
இவன் காலடியைக் கண்டால் அது மிதிப்பட்டே சாகும்!
எங்கள் சுதந்திரம் இவனால் விதைக்கப்பட்டது
இந்திய தேசத்தின் நெஞ்சில் இவனுருவம் பொறிக்கப்பட்டது!
இந்தியதேச எழுச்சியின் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜெய்ஹிந்த்!