தள்ளுதலின்றி

அலுவலகத்தின் முடிவுரா வேலைப்பளு
இமைகளில் இறங்கி கொள்கிறது
பேரூந்தின் சாய்வு இருக்கையில்
சொந்த ஊருக்கு ஏதோ வேலையாய்
பயணிக்கிறேன்
சன்னல் வழி காற்று
முகம் தழுவி செல்கிறது
பேரூந்தின் பேரிரைச்சல்
மூச்சோடு ஒரு பயண உடன்படிக்கை
செய்துக்கொண்டிருந்தது
என்னை அதட்டவும், அடக்கவும்,
கேள்வி கேட்கவும் ஆளின்றி
சரிந்து உறங்குகிறேன்...
எங்கேயாவது திடீர் நிறுத்தத்தில்
சட்டென்று கண்முழிக்கையில்
நான் வேண்டுவதெல்லாம்
இந்த பேருந்து ஒரு வட்டத்தில்
ஓடிக்கொண்டே இருக்காதா
என்பதே

எழுதியவர் : சிவா. அமுதன் (25-Jan-19, 10:00 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 72

மேலே