குடியாட்சியின் மாட்சி

இன்று நமது பொன்னாட்டின்
எழுபதாவது ஆண்டு குடியரசு தினம்
எத்தனையோ இன்னல்களுக்கிடையில்
ஆயிரமாயிரம் தியாகிகளின் இடைவிடா
போராட்டம் உயிர்த்தியாகம் ...
அண்ணல் காந்தியின் கத்தியின்றி
ரத்தமின்றி நடாத்திய போராட்டம்
இவையெல்லாம் நம்மையாண்ட
வெள்ளையனை வெளியேற்ற நாம்
அடைந்தோம் சுதந்திரம் ,'ஆடிடவே
பள்ளுபாடிடவே ஆனந்த கூத்தாடு
ஆடிடவே ; அதன்பின்னர் நமக்கென்றே
குடியாட்சியும் அமைத்துக்கொண்டோம்
இற்றைக்கு ஆண்டுகள் எழுபதிற்குமுன்

குடியாட்சி என்பது யாதோ என்று
கேட்டால், அது' குடிமக்களால், குடிமக்களுக்கான
நடத்தப்படும் குடியாட்சி .................

குடியாட்சியில் மக்களுக்கு
எழுத்து, பேச்சு.வாழ்வு இவற்றில்
பூரண சுதந்திரம் உண்டு , ஆயின்
நமக்கே அமைத்துக்கொண்ட சில
கட்டுப்பாடுகளுக்குள் சுமுக்குமாய்
வாழ வழிகாட்டுவதே குடியாட்சி
இங்கு சர்வாதிகாரத்திற்கு இடமேதுமில்லை
இங்கு ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்கள் தலைவர்கள் நடத்தும் ஆட்சி
இதுவே ஜனநாயகம் ................
அமெரிக்க வல்லரசு, பிரிட்டிஷ் வல்லரசு
ஆஸ்திரேலியா வல்லரசு இவையெல்லாம்
குடியரசுகளே .................
இவர்களுக்குப் பின் வந்த இந்திய குடியரசு
இன்று ஓர் வல்லரசின் பாதையில் ......
நாளை நாமும் ஓர் வல்லரசாகிடுவோம் என்று
நினைத்து பூரிக்கின்றேன் .......
வாழ்க நம் பாரதம்
வாழ்க பாரத மக்கள்

இணைந்திடுவோமே என்றும் நாமெல்லாம்
குடியாட்சியில் என்றுமே இனிமைக்கண்டு
என்றும் தாய் நாட்டைக் காத்து
நல்ல குடிமக்களாய் ஒற்றுமைப் பாதையிலே

என்றுமே குடியரசே நல்லரசு
விண்ணோரும் மகிழுறும் வல்லரசு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jan-19, 11:37 am)
பார்வை : 44

மேலே