குடியரசு தினம்

இன்று நேற்று நாளை
இந்திய கொடி ஏற்றும் வேளை
நல்லோர் தந்த சோலை
நம் மண்ணை வணங்கும் காலை
கொடியை ஏற்றும் இரும்பும் நம் இதயம் ஆகுமே கொடியை அசைக்கும் காற்றும் நம் மூச்சில் சேருமே கையை கூப்பி கொடிக்கு தலை வணங்கி நிற்போம் இந்தியனாக பிறந்ததற்கு என்றும் பெருமை கொள்வோம் .
குடியரசு தினம் !

காட்டுக்கு மரம் அழகு ‌
நாட்டுக்கு அறம் அழகு
மண்ணிற்கு நிறம் அழகு
மனிதர்க்கு வீரம் அழகு
அதுபோலே வாழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம் உலகை உயர்த்த உழைத்திடுவோம் விதை போலே புதைந்திடுவோம் வளர்ந்து நாமும் வாசம் தருவோம் நம் கல்வியும் நம் நாட்டுக்கே நம் உழைக்கும் பணமும் தினமும் நாட்டுக்கே .
குடியரசு தினம் !

இந்திய நாடு நமதே நம் இதய துடிப்பின் இன்னோர் உயிரே
சிந்திய ரத்தம் வழியே நாம் சிரிக்கிறோம் சரியே
கொடுத்த நாடிது கொடுங்கோல் ஆண்டது வளர்த்த நாடிது வளர்ச்சி பார்க்குது
இளைஞர் கையிலே இந்தியா உள்ளது .
குடியரசு தினம் !

எழுதியவர் : M. Santhakumar . (26-Jan-19, 5:06 pm)
சேர்த்தது : Santhakumar
Tanglish : kudiyarasu thinam
பார்வை : 26

மேலே