குடி அரசின் குடி மகன்
தள்ளாடி தள்ளாடி நான்
நடக்க
காலோடு கால் பின்னி
கால்தடுக்க
இருகை கால் விரித்து
குப்புற விழ
பூமியை அணைத்தபடி
சில நொடிகள் கண்மூடி
என் அணைப்பில் பூமி
திமிர
மெல்ல சிரித்தபடி நான்
புரள
பரந்தவானம் பளிச்சென
தெரிய
சூரியன் மட்டும் ஏனோ
என்னை முறைக்க
முறைப்பின் காரணம்
புரியாது
தயக்கத்தோடு எழுந்தேன்
என் அணைப்பில் இருந்து
விடுபட்ட பூமி சுதந்திரமாய்
சூரியனை பார்த்து கேட்டேன்
என்ன முறைப்பு என்று
பதில் ஏதும் கூறவில்லை
முறைப்பு அதுவும் மாறவில்லை
சூரியனை பார்த்து உன்
முறைப்பு
என்னை என்ன செய்யும்
பார் என் அணைப்பில் இருந்த
பூமி
இப்போது என் காலின் கீழ்
நீ எம்மாத்திரம் என்று
கூறியபடி
குப்புர விழுந்ததை மறந்து
விழுந்தும் இடுப்பில் இருந்து
உடையாத குப்பியை திறந்து
மீதம்வைத்த மதுவை குடித்து
நானும்
குடி அரசின் குடி மகனாய்