காதலி
தூரத்திலிருந்து அவள்
வடிவுடை ஓர் ஓவியமாய்க்
காட்சி தந்தாள்- மெல்ல மெல்ல
அவள் நடந்துவந்தாள் , பொற்சிலைதான்
ஒன்று உயிர்ப்பெற்று நடந்தவருகிறதோ
என்று நான் எண்ண- எதேர்ச்சையாய்
என் பாதையில் வந்த அவள்
என் மீது மோத - விழித்தே அவள் நினைப்பில்
தூங்கி நடந்த நான் விழிப்புற்றேன்- என் எதிரே
அவள்..........நான் தூரத்திலே கண்ட ஓவியம்...
பொற்சிலைப்போல் நடந்துவந்த அவள்........
ஆடிவரும் அழகு மயிலாய், ஒயிலாய்,
எழிலாய், வடிவாய் என் முன்னே
ஓவியம் சிலையாய் மாறி கவின்பெண்ணாய்
அவளையும் அறியாது என்னைத் தீண்டிவிட்டு
நாணத்தால் கால்களால் கோலம்போட்டு
என்னைப் பார்த்தும் பார்காததுபோல் நிற்கின்றாள்
நான் சற்றும் எதிர்பாராத என்னவளாய்
என் மனதில் தங்கிவிட்டாளே இவள்.
......