தாகம் தீர்த்திடு
என்னவனை
இன்னுமும் காணவில்லையே..!
இனிய காலங்கள்
இளமையை விழுங்கியும்,
இனிமையை விசமாக்கியும்,
வேகமாகச் செல்கிறது....
காலத்தை
சாதுவாக வென்று,
இளமையையும்,இனிமையையும்
உயிர்ப்பிக்கும்
என்னவன் எங்கே.....
என் கட்டிளமைக்கு
சுவை சேர்த்து
விடுதலை கொடுத்திடு
மன்னவனே....!
என் உயிரோட்டம் முழுவதும்
உந்தன் எண்ணங்களே
படர்ந்து கிடக்கின்றது...
நாட்கள் நகர்கின்றது
நாழிகையும் சுற்றுகின்றது
எனக்கானவனின் வருகையை
வாய் பிளந்து பார்த்தபடி -நான்.....
நாட்கள் நகர்கின்றது
நாழிகையும் சுற்றுகின்றது
எனக்கானவனின் வருகையை
வாய்பிளந்து பார்த்தபடி -நான்.....
என் நாழ் செய்தேனோ
என்னவனின் வருகையை
பின்னோக்கிட,
என் மன தவிப்பை
மறுக்காமல்
புரிந்து கொள்ளடா,
என் கை கோர்க்க
வந்து சேரடா......
இன்றோ நாளையோ
எனக்கானவன் வருவானென,
தினந்தோறும்
நாலி வடிவங்களை
வித விதமாக சீர் செய்கிறேன்
நளன் இரசித்து மகிழ,
நலனை உயிர்பிக்கின்றேன்
என்னில் அவன் மயங்க ....
என்னுள் வந்திடு
என்னை செவ்வைபடுத்தி,
என் தாகங்களை தனித்திடு
உனக்கான காத்திருப்பை
தகர்திடு - உன் அன்பால்......