நிபந்தனை இல்லா அன்பு

                  நிபந்தனை இல்லா  அன்பு
                  --------------------------------
தன் பிரும்மாண்டமான இறக்கையை விரித்து அந்த பிரிட்டிஷ் ஏர்  வேஸ்-இன் விமானம் பாஸ்டன் லோகன் விமானநிலையத்தில் இறங்கிய போது மங்களம் பிரம்மித்துதான்  போனாள்!  சென்னையில் இருந்து கூடவே பயணம் செய்த சீனுவின் உதவியுடன் இமிகிரேஷேன்  போன்ற பூர்வாங்கங்ளை முடித்துக்கொண்டு
கன்வீயர்  பெல்ட்-ல்  சுற்றி  வந்த தன் இரு பெட்டிகளையும்  தள்ளு வண்டியில்
தள்ளிய சிறிது  நேரத்திலேயே, முகமெல்லாம் புன்னகையும் , மகிழ்சியாகவும் சுந்தர்  தன்னை  நோக்கி கையை ஆட்டியபடி  வருவதை கண்டாள்.  சீனுவும் தாயை மகனிடம் ஒப்படைத்த நிம்மதியுடன் பிறகு சந்திப்பதாக கூறி  விடை பெற்றான்.
அருகில் தன்னை அணைத்து நின்ற  மகனை உச்சி முதல் உள்ளங்கால்  வரை
கண் இமைக்காமல் பார்த்தாள். பெயருக்கேற்றபடி சுந்தர் அழகான , சாமுத்ரிகா
இலட்சனங்களுடன்  விளங்கினான் .கண்ணீர்  பெருக்கெடுக்க பார்வை மங்கியது. "அம்மா அழாதே " என்ற சுந்தரின் குரல் கம்மியது.  அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்ல புன்னகைத்தாள். அம்மாவின் புன்னகையில் மனம் நிறைந்த மகன் ஒரு கையால் அவளை அணைத்தபடி மறு கையால் பெட்டிகள் இருந்த சக்கர வண்டியை தள்ளிக்கொண்டு போனான். இருவர் மனமும் நினைவுகளில் மூழ்கியது. 
வாழ்க்கையில் பாதியிலேயே, பொறுப்பில்லாமல் கைக்குழந்தை சுந்தருடன் விட்டுச் சென்ற கணவனை எண்ணி மாயாமல் இரவு பகலாக உழைத்து மகனை
கற்றோர் முன் சான்றோன் ஆக்கினாள்.அவள் பட்ட துயரம் சொல்லில் அடங்காது! சுந்தரும் சிறு வயதிலேயே தன் பொறுப்புணர்ந்து  படிப்பில் உயர்ந்து
அமெரிக்காவில் பொறுப்பான பதவியில் அன்னை மனம் மகிழ முன்னேறினான். மங்களம் பிள்ளைக்கு மணம் முடித்து மனமகிழ பெண்  பார்க்க நினைக்கயில் தான் அவள் நினைத்தும் பாராத சம்பவம் நிகழ்ந்தது!  தன்னுடன் படித்து , வேலையும் பார்க்கும் ஓர் அமெரிக்க பெண்ணை விரும்புவதாக கூறிய பிள்ளையின்
விருப்புக்கு மாறாக நிற்க விரும்பாத மங்களம் , எவ்வளவோ  சுந்தரம் மன்றாடியும் திருமணத்திற்கும் அமெரிக்கா செல்லவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு  ஒரு முறை வந்து அம்மாவின் வசதிகளை எல்லாம் செய்து கொடுப்பான். போன முறை வந்தப்போது தனக்கு பெண்  அவள்சாயலில் பிறந்திருப்பதைச் சொல்லி தன்னுடன் வந்து இருக்குமாறு கூறினான் .கண்ணிர் மல்க கதறும் மகனை தேற்ற முடியாமல்  மூன்று மாதங்கள் மட்டும்  இருப்பேன்
என்றதும் வானமே கை பட்டது  போல் மகிழ்த்த சுந்தர் , அடுத்த  இரண்டு மாதத்திற்குள் செய்த ஏற்பாட்டில் இன்று இவள் இங்கு!
ஏர்போர்ட் கார் பார்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த bmw காரில் உழைத்து
தேய்ந்த அம்மாவின் கைபிடித்து ஏற்றி சீட் பெல்ட்  போட்டு  அமரசெய்த சுந்தர்
காரில் அமர்ந்து ஒட்டத் தொடங்கினான். பாsட்டன்னின் முக்கிய பகுதிகள்  வழியாக  கார் சென்றது. ப்ருடன்ஷியல் , தேம்ஸ் நதி, சம்நேர் கேவ்  இவை யாவையும்  விளக்கிச்  சொன்னான். எங்கோ திருவல்லிக்கேணி  சிறுகுடியிருப்பில் இருந்து உழைப்பால்  உயர்ந்த இருவர் மனங்களிலும் பல பல எண்ணங்கள் !
"ஜோசபின்! அம்மாவைப் போலவே மிகவும் மென்மையானவள் . அம்மாவிற்கு அவளை கட்டாயம் பிடிக்கும். கடவுளே! பிடிக்கவேண்டும்! "இது சுந்தர்.
"அமெரிக்க மாட்டுப்பெண் ! முருகா! மாடி வீட்டு பார்வதியின் மருமகள் , ஒரே ஜாதி , அதே  ஊர் எனினும் நிம்மதி இல்லையே ! சரி , எப்படி யாயினும் சில நாட்கள் அமைதியாக காலம் தள்ளிவிட்டு புறப்பட்டுவிடலாம். "இது மங்களம்.
புறப்படும் முன் பார்வதி சொன்னது  நினைவுக்கு வந்தது. கவலை படாமல் போ , உன் பொறுமை உன்னை கைவிடாது. சுந்தரும் நல்ல பிள்ளை "

மிக லாவகமாக காரை ஒரு அழகிய காண்டோமொனியம் முன் நிறுத்தினான் சுந்தர். அடுத்த நிமிடமே மின்னல் போல அழகு தேவதையாய் ஒரு பெண் ஓடி வந்து கைத்தாங்கலாய்  மங்களத்தை அணைத்து காரிலிருந்து இறக்கி , குனிந்து
அவள் கால் தொட்டு வணங்ககினாள்.அம்மா! வாங்க! என கைபிடித்து உள்ளே
அழைத்து சென்றாள். எதோ மந்திரித்துவிட்டது போல ஆவலுடன் சென்ற மங்களம் அங்கே நின்ற இரண்டு வயது , தங்கசிலை போல் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த , தன்னைப் போலவே சாயல் கொண்ட சிறுமியை தன் கால்களில்  நமஸ்காரம் செய்ய வைத்தாள்.மங்களத்திற்கு தலை கால் புரியவில்லை .இதுவரை அறியா மகிழ்சி.அந்த பிஞ்சு குழந்தையை எடுத்து மார்புர அணைத்து உச்சிமுகர்ந்து  முத்தமிட்டாள்.
அதற்குள்  ஜோதி என அழைக்கபட்ட  ஜோசொபின்  சுந்தருக்கு உதவியாக பெட்டிகளை உள்ளே வைத்து விரைவில்  காபி போட்டு, முட்டி போட்டு அருகில்
அமர்ந்து "அம்மா, காபி.. "என மழலை தமிழில் கூறினாள்.சுந்தர் ஜோதிக்கு தமிழ் கொஞ்சம் தெரியும், சொல்லி கொடுத்திருக்கேன் .. என்றான்.
பம்பரமாக சுழன்று அவள் குளிக்க செய்து, சாப்பிடவும் வைத்தாள்.
இடையில் சுந்தர் கேட்கும் பணிகளையும் செய்து  கொடுக்கும் பாங்கினையும்
கவனித்தாள் மங்களம்.அவளுக்கு என ஓர் அறையை ஏற்பாடு செய்து , பூ கொத் துக்கள்  வைத்து அவள் பூஜய் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது!
"அம்மா நீங்க ரெஸ்ட் எடுங்க  " அமெரிக்கன் உச்சரிப்பில் சிரித்துக் கொண்டே
சொன்னாள் ஜோதி.
ஏனோ தெரியவில்லை , மாடி வீட்டு பார்வதியின் மருமகள் லீலாவின் நினைவு
வந்தது மங்களத்திற்கு. பார்வதி வெகு நாட்களாக  மங்களத்தின் சினேகிதி .அவள் மகன் அவள் மருமகளுக்கு எப்பொழுதும் இரண்டாம் பட்சம் தான்.இத்தனைக்கும் அவன் மிக சிறந்த வேலையில் கைநிறைய சம்பளம்

வாங்குகிறான் .எனினும் மதிப்பது இல்லை. வேறு யாரையாவது புகழ்ந்துக் கொண்டிருப்பாள். பார்வதி  எதாவது சொன்னால் பதில் பாந்தமாக , இதமாக வராது.சில சமயம் பார்வதி எலெக்ட்ரிக் பில் என்று ஞாபக படுத்தினால் ,"அது என் problem  நீங்க கவலைப்பட வேண்டாம் ." என்பது போல பதில் வரும்.
மேலும் பார்வதி "லீலா நான் கும்பகோணம் கும்பாபிஷேகத்திற்கு அடுத்தவாரம் போகலாம் என்று பார்கிறேன் என்றால். " நன்னா வெயில் அடிக்கிறதே கொஞ்சம் வத்தல் போட்டுட்டு போங்கோ ." இப்படி கண்டிஷன் வரும்.
எதை எதையோ நினைத்து கண் மூடினாள் மங்களம்.
காலையில்  "  அம்மா " என்று நின்றனர் சுந்தரும், ஜோதியும்.  பெயருக்கேற்றபடி வந்தவுடனேயே ஒளிவந்தது போல் இருந்தது. காபி அருந்த
மேசைக்கு தானும் அவர்களுடன் வருவதாக  கூறியதை கேட்டு  மிகவும் மகிழ்ந்தார்கள் . பார்த்து பார்த்து கவனித்துக்  கொண்டார்கள் .இது இவள் இதுவரை அனுபவிக்காத ஒன்று ! பாசாங்கு இல்லாத அன்பு என்பது புரிந்தது!
அருகில் வந்து அமர்ந்த சுந்தரிடம் , "சுந்தர் அன்று சொன்னாயே இங்கேயே உங்களுடன் தங்க கிரீன் கார்டு  ஏற்பாடு பண்ணட்டுமா என்று அதை செய் . நாளையிலிருந்து குழந்தை டே கேர் போகவேண்டாம் ,என்னிடம் விட்டுச் செல்லுங்கள் . நான் பார்த்துக்கிறேன் ." என்ன புரிந்ததோ குழந்தை ஓடி வந்து
அவள்கலை கட்டிக் கொள்ளுகிறது.
ஆனால் இவளுக்கு நன்கு புரிகிறது இவர்கள் காட்டுவது un conditional
love அதாவது நிபந்தனை இல்லா அன்பு !தன்னிடமிருந்து அன்பைத் தவிர வேறு
எதையுமே எதிர் பார்க்காத அன்பு! அதற்க்கு ஜாதி இல்லை மதம் இல்லை, நாடு இல்லை, ஊர் இல்லை!






   

http://bit.ly/otv8Ik


God's Blessings  to everyone.

எழுதியவர் : சாந்தா வெங்கட் (30-Jan-19, 6:59 pm)
சேர்த்தது : சாந்தா
பார்வை : 259

மேலே