ராசாங்கம் ஏதுமில்லே என்பேரு ராசாவாம்
ராசாங்கம் ஏதுமில்லே என்பேரு ராசாவாம்
*********************************************************************
ராசாங்கம் ஏதுமில்லே என்பேரு ராசாவாம்
ராக தாளம் சேரவில்லே நானுந்தான் பாட்டிசைச்சேன்
படிக்கஒரு வழியில்லே உலகத்த நான்படிச்சேன்
வேல சோலி ஏதுமிலை உண்டேநான் உறங்குவேன்
சொத்துபத்து ஏதுமின்றி நடபா தையே என்குச்சு
செத்துவச்ச தொண்ணிலே மனையும் மகவுண்டு
உறங்கி எழுந்து மீண்டுமுறங்க பொழுதுபோவுது
எங்களுக் கென்று இரவும்பகலும் தனியாகவா
உருளுது எல்லாம் அவன்கையிலெ ஆமாய்யா !