நீயின்றி உயிர் வாழலாம்!!!


• பொய்யுண்மை
எதற்குப் பொய்ப் பேச்சு
கடலும் வானும் நிறம் மாறாது...
சூரியனும்
மேற்கில் உதிக்காது...
கடல் நீரும்
வற்றி விடாது...
நீயும் நானும்
உண்ணலாம் உறங்கலாம்...
நீயின்றி நானும்
நானின்றி நீயும்
உயிர் வாழலாம்...
வேண்டுமானால்
நாம் கொண்ட முதல் காதல்
ஒரு வேளை
உண்மையாக இருக்கலாம்
மனம் ஒரு குரங்குதானே!

© ம. ரமேஷ் கவிதைகள்

எழுதியவர் : ம. ரமேஷ் (29-Aug-11, 2:42 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 538

மேலே