தாமரை
பெண்ணே உன் அங்கத்தில்
முதலாய் இருக்கும் முகம்,
செந்தாமரை ஒக்கும் -உந்தன்
எழில்பொங்கும் அங்கத்தின்
இடையாய்த் தோன்றும்
இடையே தாமரைக்கொடி,
உந்தன் அங்கத்தின் கடையாய்
அமைந்த உன் பாதங்கள்
பெண்ணே சிவந்த தாமரையே
இப்படி மாமலர் தாமரையாய்
எனக்கு நீ காட்சி தருகின்றாய்