மண்ணை ஏந்தறவனா

ஏன்டா ஏழுமலை உம் பேரனுக்கு என்ன பேருடா வச்சிருக்கிறீங்க.
@@@@
பாவாயக்கா இந்தக் காலத்தில பாட்டன், அம்மா, அப்பா கேட்டுகிட்டா பிள்ளைங்களுக்குப் பேருங்கள வைக்கிறாங்க. அவுங்க இசட்டத்துக்கு ஏதாவது வேற மொழிப் பேரை வைக்கிறாங்க.
@@@@
அது தெரிஞ்ச கதைதான்டா ஏழுமலை. நாங் கேட்டதுக்குப் பதில் செல்லுடா.
@@#@@
எம் பேரம் பேரு மன்வேந்த்ரா..
@@@@@
என்னது மண்ணை ஏந்தறவனா?
@@@@
இல்ல. இல்ல. மன்வேந்த்ரா.
@@@@@
உம் பேரன் மண்ணை ஏந்துனா என்ன? குப்பையை ஏந்துனா என்ன? அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு சொல்லுடா ஏழுமலை.
@@@@@
அந்தப் பேரை எம் பேரனுக்கு வச்ச எம் மவன் மருமகளுக்கே அந்தப் பேருக்கான அர்த்தம் தெரியாதாம். நமக்கென்ன அக்கா வந்துச்சு. நானே மூணு நாளு கசடப்பட்டு எம் பேரம் பேரை மனசில பதிய வச்சேன்.
@@@@
சரி... நான் அந்தப் பேருக்கு அர்த்தம் கண்டுபிடிக்காம விடமாட்டேன்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Manvendra = king among men.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (3-Feb-19, 9:55 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 51

மேலே