மழை வந்தது

பருவமழைப் பொய்த்தது
மருதமும் பாலையாய்ப் போனது
எங்கும் வறட்சி
பயிரிட நீரில்லை காய்ந்த நிலம்
காய்ந்த கேணி,குளமும் குட்டையும்
குடிக்க நீருக்கு மக்களின் கூக்குரல்
தண்ணீர், தண்ணீர் எங்கும் திண்டாட்டம்
இப்போது எல்லாம் வல்ல இறைவன்
மக்கள் கண்முன்னே ....................
மழைவேண்டி வேள்வி.... மறை ஓதுவார்
வேத கோஷம் விண்னைதுளைக்க
நாதஸ்வர ஒலி ........அமிர்தவர்ஷிணியாய்
விண்ணை அடைந்தது அடைந்து அங்கு
தூங்கிக்கொண்டிருந்த இந்திரன் கண்களைத்
திறக்க .............இசைக்கு தலைவணங்கினான்
இறைவனும்....... கண்கள் திறந்தான்
ஆனந்த கண்ணீர் விட்டான் மண்ணில்
மலையாய்ப் பெறுக மக்கள் மனமும் குளிர

நம்பினார் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Feb-19, 2:24 pm)
Tanglish : mazhai vanthathu
பார்வை : 260

மேலே