பின்னிரவு வரை நான்

இறைவன் படைப்பினில் எத்தனை வேகம்
எல்லோர் மனதிலும் எத்தனை பேதம்
சிந்தனை தனிலே விந்தையை வைத்த
ஐந்தெழுத்துக்குரியனை நெஞ்சினில் ஏத்துவோம்

பஞ்சையும் படைத்தான் பாறையையும் வளர்த்தான்
நஞ்சைக் கொண்டு சிலர் நாவினை படைத்தான்
பாலின் நிறம் போல் பாசத்தைப் படைத்தான்
பரம சாதுக்களை பசுவாய் படைத்து பாவம் செய்தானே

உரிமை நானென்று உளறியோர் கோடி
உரிமையாய் உதவி கேட்க ஓடினேன் நாடி
உளி போல் வெம் வார்த்தையால் செதுக்கியோர் கோடி
ஊனமுற்றோன் போல் விழுந்தேன் மனம் வாடி

பிணக்குற்ற மனம் அது கணக்காய் வாழ
பின்னிரவு வரை நான் பெரும்பாடு பட்டேன்
பேதலித்த மனம் நிறைய பெரும் பணம் சேர்த்தேன்
பேயைப் போலவே அதைத் தினம் காத்தேன்

பெண்டீர் ஆடவர் என பேதமின்றி
அண்டியவர் அனைவரையும் ஆத்திரத்தில் எதிர்த்தேன்
பெருஞ்செல்வம் என்னிடம் பெருகி இருக்க
பிழை செய்தவன் போல் நான் தனியாய் தன்மையில்.
__ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (5-Feb-19, 9:24 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 293

மேலே