நெஞ்சம் வீங்கும் வரை
அன்னை தவறு செய்தாள்
அதனால் நான் பிறந்து விட்டேன்
மண்ணில் உள்ளோர் எல்லாம்
மனம் தோறும் நஞ்சு வைத்து
நெஞ்சம் வீங்கும் வரை - வார்த்தை
நெருப்பால் உமிழ்கின்றனர்
அஞ்சி அடங்கிவிட
அவச்செயல் எதுவும் செய்யவில்லை
எண்ணின் உடலதனை எந்திரமாய் தினமுருக்கி
மண்ணின் செல்வந்தரைப் போல்
மாறி வந்தேன் சிறுக சிறுக
கண்ணி வைத்தால் மாற்றிக்கொள்ளும்
கருங்குரங்காய் எனை நினைத்து
கண்ணால் கண்ணி வைத்து
காத்திருந்தனர் கனவான்கள்
காட்டு விலங்கு மாட்டி கொள்ளும் காற்று மாட்டுமோ.
__ நன்னாடன்