அசைவம் இலவசம்
தலை அறுந்த ஆட்டின் சதை
தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது !
வெட்டு மேடையில்
ஆட்டின் தலை கொம்புடன்
கத்திக்கருகில் கம்பீரமாக அமர்ந்திருந்தது !
மழைத் தூறல் வலுக்கவே
தெரியாமலே கவனிக்காமல் அந்த மனிதர்
கசாப்புக்கடையில் ஒதுங்கினார்
என்ன இன்னைக்கு இந்தப் பக்கம் ஐயரே
ஒரு பொட்டலம் தரவா இலவசமாகவே தாரேன்
என்றான் கசப்புக்கடைக்காரன்
திரும்பிப் பார்த்தார் ...!!!
மழையே தேவலாம் என்று
உத்தரீயத்தை தலை மேல் பிடித்துக்கொண்டு
நனைந்து கொண்டே நடந்தார் ஐயர் !